வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியை சேர்ந்த கேசவன் என்பவர் சித்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிரெடிட் கார்டை activate செய்ய வங்கி விவரங்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஏமாற்றி வங்கி கணக்கிலிருந்து சுமார் ₹90,000 பணத்தையும், விரிஞ்சிபுரம் வல்லண்டராம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்னும் நபர் முகநூலில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கும் என்ற பதிவை பார்த்து நம்பி, ₹20,000 பணத்தை செலுத்தி ஏமார்ந்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் துரிதமாக இழந்த பணம் ₹1,10,000/- முழுவதும் மீட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் N.மணிவண்ணன் IPS அவர்களின் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ந.கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளர் கி.புனிதா, காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment