வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை இவரது மகன் வெங்கடேசன் (வயது 35) இவர் மத்திய துணை ராணுவ படையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆவடியில் பணியாற்றி வந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெங்கடேசன் கடந்த ஒரு ஆண்டாக விடுமுறையில் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து ஆவடியில் உள்ள படைப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத யடத்து அங்கிருந்து வந்த துணை ராணுவ படையினர் ராணுவ மரியாதை உடன் உயிரிழந்த வெங்கடேசனின் உடலை அடக்கம் செய்தனர். இறந்த வெங்கடேஷனுக்கு திருமணம் ஆகி கற்பகம் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment