குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் நூறு சதவீத ஒட்டுப்பதிவு குறித்து வாகன பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. குடியாத்தம் தொகுதி தேர்தல் நடத்தும் துணை அதிகாரியும் சொற்களைற்றமான சுபலட்சுமி தலைமை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜ் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக தாலுகா அலுவலக வளாகத்தில் நூறு சதவீதம் ஒட்டளிக்க- வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும், ஓட்டு போடுவது நமது உரிமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வாகன விழிப்புணர்வு ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இப்பேரணையில் குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி மகளிர் திட்ட அலுவலர் நாகராஜ் நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் வடிவேல் பலராமன் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் நகர நிர்வாக அலுவலர் சபரிமலை மற்றும்அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment