தாளாளர் டாக்டர் ஏ.கே.கிருஷ்ணசுவாமி தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜி.லக்ஷ்மிநரசிம்மன், துணைத்தலைவர் வழக்கறிஞர் சுதாபிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிர்வாக அலுவலர் கே.மலர்விழி, அறக்கட்டளை உறுப்பினர்கள் கிருத்திகா செந்தில், லில்லி சுப்பிரமணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
ஆசிரியை ரேவதி அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் எம்.ஆர்.மணி ஆண்டறிக்கை வாசித்தார். குடியாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ்.செளந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி அனைத்து வகுப்புகளிலும் முதல் தரம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
நகர்மன்ற உறுப்பினர் மனோஜ் மற்றும் இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவி ஆகியோர் நூறு சதவீத வருகைப்பதிவு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளான மருமகள் கொடுமை நாடகம், சிவதாண்டவ நடனம், கல்வியா, செல்வமா என்ற தலைப்பில் பட்டி மன்றம், சுட்டிகளின் வரவேற்பு நடனம், பிரமிடு, யோகா, வில்வித்தை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இறுதியில் ஆசிரியை ஆனந்தி நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment