வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதிநகர் அடுத்த அறுப்பு மேடு பகுதியில் பனிரெண்டாவது வட்ட துணை செயலாளர் டி சிவகாமி ஆர் சாந்தி திமுகவிலிருந்து விலகி அதிமுக வட்ட துணை செயலாளர் M M . சேகர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
வட்ட பொருளாளர் எம்ஜி வெங்கடேசன், மட்ட மேலவை பிரதிநிதி கே தனஞ்செழியன் சி கோவிந்தசாமி ஆர் விநாயகம் ஆகியோர் முன்னிலையில் நேற்று அதிமுக அமைப்பு செயலாளர் வி.ராம் அவர்களை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டனர். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த வட்ட துணை செயலாளர்கள் அமைப்பு செயலாளர் ராமு அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அதிமுகவில் இணைந்த சகோதரிகளுக்கு அதிமுகவின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment