வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் செஞ்சிலுவை சங்கம் மற்றும் விஐடி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது. விஐடி வேந்தர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விஐடி துணை தலைவர் ஜி.வி செல்வம், துணைவேந்தர், இணை துணை வேந்தர், பதிவாளர் மற்றும் மாணவர் நலன் இயக்குனர் உடன் இருந்தனர்.
மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஊழியர்கள் 651 யூனிட் ரத்தம் தானம் செய்தனர். பெறப்பட்ட ரத்தம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கும், சிஎம்சி, நாராயணி மருத்தவமனைகளில் உள்ள ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment