பரிசு சான்றிதழ் வழங்கி சிறப்புரை போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி ஓய்வுபெற்ற மாவட்ட தொடக்கல்வி அலுவலர் கோபால இராசேந்திரன், தலைமை ஆசிரியர் கோ.பழனி, கல்வி உலகம் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
வாழ்த்துரை மக்கள் நல சந்தையின் ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ்செல்வன், இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை துணைத்தலைவர் இர.சீனிவாசன், மருத்துவ குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து, ஓய்வுபெற்ற கல்லூரி கல்வி துணை இயக்குநர் முனைவர் எம்.கே.கஜபதி, வேலூர் அரசு கல்வியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் முனைவர் கலைச்செல்வன், அறங்கவலர் எம்.சுவாமிநாதன், காங்கேயநல்லூர் விஸ்வ வித்யாலயா பள்ளியின் செயலாளர் செந்தில்வேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பள்ளி மாணவர்களின் மாறுவேட போட்டி, இசை, நடனம், நாடகம், உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றது. பள்ளி ஆசிரியைகள் சே.சித்ரா, சு.மலர்கொடி, இரா.தனலட்சுமி, வெ.பாரதி, தணிகைசெல்வம், கோரந்தாங்கல் உதவி அஞ்சலக அலுவலர் வெ.கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியை சே.சித்ரா நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment