கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை பெறும் தமிழக பெண்களை அவதூறாக பேசிய பாரதிய ஜனதா கட்சியின் குஷ்பூவை கண்டித்து புதிய பஸ் நிலையத்தில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குஷ்பு படத்தை எரித்தும் குஷ்பு உருவ படத்தை செருப்பால் அடித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினருமான அமுலு விஜியன் தலைமை தாங்கினார்.
வேலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வாசுகி கோடீஸ்வரன் மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் ஜெயந்தி பத்மாவத் மாவட்ட மகளிர தொண்டரணி தலைவர் சரோஜா குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் முன்னாள் நகர மன்ற தலைவர் புவியரசி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்கள் நகர ஒன்றிய நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment