முத்தமிழ் சுவை சுற்றம் 27 ஆம் ஆண்டு இன்பத் தமிழ் திருவிழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 March 2024

முத்தமிழ் சுவை சுற்றம் 27 ஆம் ஆண்டு இன்பத் தமிழ் திருவிழா.


குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்தின் 27-ஆம் ஆண்டு இன்பத் தமிழ் திருவிழா 9ஆம் தேதி திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வேலூர் முன்னாள் எம்பியும் புதிய நீதிக் கட்சித் தலைவருமான  ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டு பேசுகையில் குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்ற விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.  எனது குருநாதர் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் ஆண்டுதோறும் விழாவில் பங்கேற்கிறார். பதுமனாரின் தமிழ்த் தொண்டு பாராட்டுக்குரியது. 

தமிழ் அறிஞர்களுக்கு உதவிடவும், தமிழ்த் தொண்டுக்காகவும் இனி முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்துக்கு இனி ஆண்டுதோறும் ரூ.2 லட்சத்தை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைகழகம் சார்பில் வழங்குவேன்" என்று  ஏ.சி.சண்முகம் பேசினார். பின்னர் குடியாத்தம் முத்தமிழ்ச்சுவைச் சுற்ற நிறுவனர் வே.பதுமனார் பேசுகையில், "வெற்றி மீது வெற்றி வந்து ஏ.சி.சண்முகத்தை சேரும்" என்று வாழ்த்தினார். 


வழக்கறிஞர் கே.எம்.பூபதி, பேராசிரியர் அன்பு, புதிய நீதிக் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.கோட்டிஸ்வன், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் பாரத் மகேந்திரன், நகர செயலாளர் எஸ்.ரமேஷ்  தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரவீன் குமார் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad