கம்மவார் சேவா டிரஸ்ட் சென்னை பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காட்பாடி ரோடு ராஜா கோயில் R G D திருமண மண்டபத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி T L நாராயணசாமி செவுத்திரி (லேட் ) அவர்களின் நினைவாக இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.
டி என் ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்தார். கே சுகுமார் அனைவரையும் வரவேற்றார், இதில் ஆர் பாலாஜி டி சி ஜெகநாதன் ஜி ஜெயவேல் பி சிவகுமார் என்சி ஸ்ரீதர் கே எ முரளி ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் கண்களில் புறை நீக்குதல் கண்ணில் நீர் வடிதல் கண் எரிச்சல் கண்களில் சதை வளர்தல் ஆகியவற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கார்த்திகேயன் ஆரிஷ் ஆர்த்தி நியான்திரி அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர்கள் பாலாறு மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர் தகுதி வாய்ந்தவர்களை அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment