நகை கடை ஊழியரிடம் 300 கிராம் தங்க கட்டிகள் அபேஸ். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 24 March 2024

நகை கடை ஊழியரிடம் 300 கிராம் தங்க கட்டிகள் அபேஸ்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சுதேஷ். இவர் சென்னை, பெங்களூரில் நகை கடைகள் நடத்தி வருகிறார். பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஊழியர் ராகுலை சுரேஷ் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு அங்குள்ள கடையிலிருந்து 300 கிராம் எடையுள்ள மூன்று தங்க கட்டிகள் மற்றும் 16 கிராம் நகை ஆகியவற்றை சென்னை நகைக் கடைக்கு எடுத்து வரும்படி கூறினார்.

இதை அடுத்து ராகுல் மூன்று தங்க கட்டிகள் மற்றும் 16 கிராம் நகையை ஒரு மணி பஸ்ஸில் எடுத்தக்கொண்டு அன்று இரவு பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்லும் பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார் இரவு 10:40 மணியளவில் அந்த ரயில் காட்பாடி ரயில் நிலையம் வந்தது. 


அப்பொழுது திடீரென ராகுல் பயணித்த பெட்டிக்கு வந்த மூன்று மர்ம நபர்கள்தங்களை போலீசார் என்று கூறி அவர்கள் வைத்திருந்த மணி பரிசை வாங்கி சோதனை செய்தனர். அதிலிருந்து தங்க கட்டிகள் மற்றும் நகைக்கு ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு ராகுல் அதற்கான ஆவணம் கொண்டு வரவில்லை என்று கூறியுள்ளார். இதை எடுத்து மூன்று மர்ம நபர்கள் தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் பொழுது உரிய ஆவணம் இல்லாமல் தங்கள் கட்டிகள் நகைகள் எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறி மிரட்டி உள்ளனர். 


பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுலை கூட்டி சென்று அவர் வைத்திருந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டனர்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad