திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் இறைச்சி கடையில் தீவிர ஓட்டு சேகரிப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 24 March 2024

திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் இறைச்சி கடையில் தீவிர ஓட்டு சேகரிப்பு!


வேலூர் மாவட்டம், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 2024 தேர்தலையொட்டி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், திரைப்பட நடிகரும், சமூக உணர்வில் மிகுந்த அக்கறை காட்டுபவருமான வேட்பாளர் மன்சூர் அலிகான் வேலூர் கன்சால்பேட்டை புதிய மீன் மார்க்கெட் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

திரைப்பட நடிகரும், சமூக உணர்வு மிக்கவருமான மன்சூர் அலிகானுக்கு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், பொதுமக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து மன்சூர் அலிகானுடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ஆட்சியில் மாற்றங்கள் வேண்டுமென கூறி வேட்பாளர் மன்சூர் அலிகானை  மனதார வரவேற்று உற்சாகப் படுத்தி தங்களது பேராதரவை தெரிவித்து வருகின்றனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad