ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க நிர்வாக்குழு கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 24 March 2024

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க நிர்வாக்குழு கூட்டம்.


வேலூர் மாவட்டம் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் வேலூர் மண்டல அளவிலான நிர்வாக குழு கூட்டம் வாலாஜாபேட்டையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் மு.சண்முகம் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் எ.அப்துல் ரஹீம் வரவேற்று பேசினார்கள். மாநில துணைத்தலைவர் நிலவு குப்புசாமி கருத்துரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் க. பாண்டுரங்கன் திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் வரதபழனி திருப்பத்தூர் மாவட்ட தலைவர் த.துரைமணி செயலாளர் கே.அச்சுதன் பொருளாளர் சி.எஸ்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.


வேலூர் மாவட்ட அமைப்பாளராக செ.நா.ஜனார்த்தனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத் தலைவர் கோ.முரளிதரன் மாநில பொதுச் செயலாளர் ந.பர்வதராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து துண்டு அறிக்கைகளை வேலூர் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனிடம் வழங்கி பேசினார்கள். ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் எ.சுவாமிநாதன், வாலாஜா வட்டார தலைவர் ஆர்.முனிரத்தினம், சோளிங்கர் வட்டார தலைவர் பொன்னுரங்கம், ஆறுமுகம், டி.எத்துராஜ் உள்ளிட்ட இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட உறுப்பினர்கள் பலர் பேசினர்.


பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .

  1. ஏப்ரல் 16ஆம் தேதி வேலூர் மண்டல அளவிலான பேரவை கூட்டம் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
  2. இந்த மண்டல பேரவையில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சார்ந்த ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
  3. ஓய்வூதியம் 70 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களுக்கு 10% அடிப்படை ஓய்வூதியர்தில் உயர்வு வழங்கிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  4. மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களுக்கு செலவினத்தை அரசே ஏற்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  5. தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த கோருவது என தீர்மானிக்கப்பட்டது.


உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் கே.ஆறுமுகம் நன்றி கூறினார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad