சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 4 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 March 2024

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 4 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணம்.


வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தொகுதி கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியில் உள்ள உடற்பயிற்சி அரங்கத்திற்கு சுமாா் ரூ 4 லட்சம் மதிப்பில்லான உடற்பயிற்சி உபகரணங்கள் இன்று மாலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தியார் புரட்சி பாரதம்   கட்சித் தலைவர் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 4 லட்சம் மதிப்பில்லான உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கினார்.


சாமியார் மலையில் உள்ள உடற்பயிற்சி அரங்கத்திற்கும் சுமார் 4 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு அதிமுக கழக அமைப்பு செயலாளர் வி. இராமு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் ரமேஷ் குமார் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் எல் எஸ் வனராஜ் மில் பழனி ராஜி கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad