முதலமைச்சரின் இந்த அறிவிப்பினை தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மனதார வரவேற்கின்றது மேலும் மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படாமல் தொடர ஆணையிட வேண்டுகின்றோம்.
அரசின் அறிவிப்பு குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரசின் இந்த அறிக்கையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து 01.01.2024 முதல் 46 சதவிகித அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்கள் அரசின் இந்த அறிவிப்பினை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும் மனதார வரவேற்கின்றோம்.
மேலும் மேல்நிலைப்பள்ளிகளில் தெழிற்கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறையும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலை தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடும் நிலை ஏற்பட்டுள்ளது மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் மூடப்படப்படாமல் தொடர்ந்து செயல்பட ஆணையிட வேண்டுகின்றோம்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அழைத்து பேசியதன் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்படும், முடக்கப்பட்டுள்ள ஈட்டியவிடுப்பு சரண் செய்து பணமாக்கும் நடைமுறை மீண்டும் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து எதிர்பார்புகளுடன் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பு வரும் என எதிர்பார்கின்றோம் என தெரிவித்தார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment