வீட்டில் பதுக்கி வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட குட்க்கா பறிமுதல். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 March 2024

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட குட்க்கா பறிமுதல்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை சித்தி விநாயகர் கோவில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போன்ற போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் நகர உதவி ஆய்வாளர்கள் ஜெகதீசன் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் அதிரடி சோதனை செய்தார்கள்.


அப்போது சித்தி விநாயகர் கோவில் தெருவில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. சோதனை செய்த போலீஸ் சுமார் 50 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு சுமார் ரூபாய் 75 ஆயிரம் இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் புவனேஸ்வரி பேட்டை மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்பவர் போதைப் பொருட்களை வாடகை வீட்டில் பதுக்கி வைத்துள்ளார் என்று தெரிய வந்தது


மேலும் அவர் பழைய வீட்டுப் பொருட்களை வைத்துக்கொள்ள வீடு வாடகை எடுத்து இருந்தது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad