வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி பேரணாம்பட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பேர்ணாம்பட்டு மற்றும் குடியாத்தம் வட்டம் 634 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி அவர்கள் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் கலந்து கொண்டு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் பேர்ணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் பேர்ணாம்பட்டு துணைத் தலைவர் ஆலியாா் ஜீபேதா் அகமத் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஒன்றிய கழக செயலாளர் கே ஜனார்த்தனம் எம் டேவிட் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்தரகுமாரி மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஒன்றிய நிர்வாகிகள் நகர கழக நிர்வாகிகள் பயனாளிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment