நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 March 2024

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்.


வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் (Monthly Crime Review Meeting) நடைபெற்றது. 


இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும். ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும். கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம், குட்கா, கஞ்சா மற்றும் மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாக குறைக்க குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாவிளை குண்டர் தடுப்பு சட்டதின் கீழ் அடைக்கப்பட வேண்டும்.


இரவு ரோந்து மற்றும் வாகன தனிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். CCTV கேமராக்களை அதிகப்படுத்த வேண்டும், POSCO, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், SC/ST வழக்குகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். மற்றும் காவல் அதிகாரிகள் அனைவரும் நிலைய எல்லைக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வரும் காலங்களில் குற்றங்கள் மற்றும் விபத்துகள் நடைபெறாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


 இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள், சிறைத்துறை, வனத்துறை, மருத்துவத்துறை (தனியார் மற்றும் அரசு), நெடுஞ்சாலைத்துறை, நீதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad