வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்த (வயது 92) வயதான காவேரி ஓய்வு பெற்ற ஆசிரியை தனது உடலை தானமாக வழங்க வேண்டும் என அவர்கள் வாழும்போதே பதிவு செய்திருந்தார்கள். அதன் அடிப்படையில் காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கம் சார்பில் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் இன்று தானமாக வழங்கப்பட்டது.
மறைந்த காவேரி அவர்களுடைய கணவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மறைந்த சாமிநாதன் இவர்களின் மகள் எஸ்.விமலா ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மருமகன் என்.எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் எஸ்.பிரசன்னலட்சுமி, ஜி.வி.சந்திரசேகரன் இணைந்து உடல் தானமாக தர முடிவு செய்து வழங்கினர்.
இந்த நிகழ்வில் காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் துளிர் பள்ளி தலைமை ஆசிரியர் த.கனகா ஓய்வு பெற்ற பதிவாளர் பாலசுப்பிரமணி, கன்னிகா, குடிநீர் வடிகால் வாரிய ஓட்டுனர் ஆர்.ரகுநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
.jpg)
No comments:
Post a Comment