இந்த பயிற்சி வகுப்பினை வேலூர் சரக சிறைத்துறை துணைத்தலைவர் ராஜலட்சுமி தொடக்கி வைத்தார். ஆப்காக இயக்குநர் பிரதீப் தலைமை தாங்கினார், இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் சிறைவாசிகளுக்கு ஆபத்து காலங்களில் எவ்வாறு முதலுதவி அளிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியினை முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத்தலைவர் மூத்த வழக்கறிஞர் டி.எம்.விஜயராகலு, செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் அளித்தனர். முன்னதாக ஆப்கா பேராசிரியர் பியுலா இமானுவேல் வரவேற்று பேசினார். முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் 1932ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு விடுதலையாகும் சிறைவாசிகள் மறுவாழ்விற்காக பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்து வருவது குறித்தும் இந்த பயிற்சியில் முதல் உதவியாளர் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது, செயற்கை சுவாசம் அளிக்கும் முறை, பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி ஏற்பட்டால் செய்யக்கூடிய நடைமுறைகளில் காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த ஒழுக்கை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல் முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment