இதன் அடிப்படையில் இன்று 19.03.2024-ம் தேதி குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை அவர்களின் தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதி கங்காசரம் எனுமிடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .செல்வமூர்த்தி, கள்ளிச்சேரி என்பவருடைய சுமார் 500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும் 10 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் ருக்மான்கதன் அவர்களின் தலைமையிலான போலீசார் கொட்டுங்கால் மலைப்பகுதி அருகே சோதனை மேற்கொண்டு எதிரி பாபா த/பெ ஐயப்பா, கோட்டைச்சேரி என்பவருடைய சுமார் 800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மீது 08 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment