அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பவர்கள் மீது மனு கொடுத்தவர் மீது தாக்குதல். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 1 March 2024

அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பவர்கள் மீது மனு கொடுத்தவர் மீது தாக்குதல்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை அருகே ஏரியில் அளவுக்கு அதிகமாக மணல் டிராக்டர் மூலம் அல்லுகிறார்கள் என்று கடந்த 20 நாட்களுக்கு முன்புதகவலை தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 46)த/பெ. கோவிந்தன்என்பவர் குடியாத்தம் பி.டி.வோக்கு மனு கொடுத்தார். மனுவின் பேரில் அதிகாரிகள் காவல்துறை தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மணல் அள்ளுவதை விசாரணை செய்து நிறுத்தி உள்ளனர்.

இது குறித்தும் ரமேஷ் உடைய சித்தி (வயது 60)க/பெ.காமராஜ் இவர்கள் முன் விரோதம் காரணத்தை குறித்து தூண்டுதலின் பேரில் அவருடைய உறவினர் கோவிந்தராஜ் (வயது 47)த/பெ. ரகுபதி இவர் மற்றும் ஆந்திரா பலமனேர் கோட்டையூர் பஞ்சாயத்து சத்த பேட்டை பகுதியைச் சேர்ந்தசந்திரபாபு அவருடைய நண்பர்கள் இரண்டு பேர் மொத்தம் நான்கு பேர் சேர்ந்து ரமேஷ் என்பவரை கட்டையாலும் கையாளும் சரமாரியாக தலை மீது கை மீது தாக்கியுள்ளனர். அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad