வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பொன்னையாறு நீ வா நதி கரையில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கனி வாங்கிய விநாயகருக்கு தனி சன்னிதி அமைந்திருக்கும் தனுமத்திய அம்மாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவர் தேர்த்திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோவிலில் உற்சவம் மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட நேற்று அதிகாலை மா வீதிகளில் வளம் வந்து அருள் பாலிக்க கோவில் கொடி மரத்திடம் அர்ச்சகர்கள் குழுவினர் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் கோவில் கொடிமரத்தில் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்.

No comments:
Post a Comment