பங்குனி கிருத்திகையொட்டி வெள்ளி கவச அலங்காரம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 16 March 2024

பங்குனி கிருத்திகையொட்டி வெள்ளி கவச அலங்காரம்.


வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மலை மேல் சுப்பிரமணிய நாதராகவும் மலை அடிவாரத்தில் ஆறுமுகநாதர் ஆகவும் வீச்சு இருக்கின்றார். இங்கு கிருத்திகை பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

 இந்த நிலையில் நேற்று பங்குனி மாத கிருத்திகையை தினத்தை ஒட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வெள்ளிக்கவசம் சந்தன காப்பு அலங்காரத்திலும் ஆறுமுகநாதர் வெள்ளி கவச அலங்காரத்திலும் எழுந்தருளினார பங்குனி கிருத்திகை தினமான நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் ஆறுமுகநாதரை தரிசனம் செய்தனர்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:

Post a Comment

Post Top Ad