கே வி குப்பம் தொகுதி தேர்தல் உதவி அலுவலர் சுமதி முன்னில வகித்தார் கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பேசுகையில் சுவர் விளம்பரம் செய்வது பிரச்சாரத்துக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பதிவு செய்தல் தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட வேட்பாளர் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் அதன்பின் அனுமதி வழங்கப்படும், பொது இடங்களில் நடைபெறும் கூட்டங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர புதிய இடங்களில் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும்
நட்சத்திர பேச்சாளர்கள் வருகையின்போது சட்டம் ஒழுங்கு மற்றும் கூட்ட நெரிச்சல் கட்டுப்படுத்துவது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பொது இடங்களில் இடையூறு இல்லாத வண்ணம் போலீசார் கண்காணிக்க வேண்டும், தெருமுனை மேடைப் பிரச்சாரத்தின் போது அமைக்கப்படும் மேடைகளில் அனுமதிக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுதி தன்மையை பொதுப்பணி துறையினர் கண்காணிக்க வேண்டும் பிரச்சாரத்தின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்வது அதிகப்படியான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வருகை உள்ள இடங்களை தங்களின் தீயணைப்பு மீட்பு பணிகள் வாகனத்தை தேவை ஏற்பாட்டின் கொண்டு செல்லுதல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தும் அலங்கார விளக்குகள் மைக் போன்றவற்றைக்கு அரசின் மின்சாரத் தினை பயன்படுத்தாமல் ஜெனரேட்டரை வைத்து கொண்டு மின்சாரத்தை பயன்படுத்துவதும் மின்சாரத்தின் வயர்களளின் உறுதி தன்மையைப் ஆய்வு செய்ய வேண்டும்.
பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் வாகனத்தின் உரிமம் செல்ல தக்க நிலையில் உள்ளதா என்று வாகனத்தை இயக்கவும் உரிமையாளரின் உரிமை காலம் நல்ல நிலையில் உள்ளதா என்று மோட்டார் வாகன அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார், இதில் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வட்டாட்சிய சித்ராதேவி கேவி போ வட்டாட்சியர் சந்தோஷ் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வடிவேலு பலராமன் மற்றும் போலீஸ் தீயணைப்பு பொதுப்பணித்துறை மின்சார வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment