வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமை தாங்கினார். ஆலோசனை கூட்டத்தில் வட்டாட்சியர் சித்ராதேவி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நரசிம்மன் கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராம பாஸ்கர் மேற்கு வருவாய் ஆய்வாளர் புகழரசன் வளத்தூர் பிக்கா ஆய்வாளர் எஸ்வந்தர் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம் செந்தில் காந்தி வெங்கடாசலம் உள்பட பல கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு அரசு கட்டிடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள் சின்னங்கள் கொடி கம்பங்களை நகரப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment