வேலூர் தொகுதி பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக 50000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பங்களா மேடு கூட்ரோடு பகுதியில் பறக்கும் படை போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது குப்பம் to குடியாத்தம் சாலையில் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர் காரில் குப்பம் சாந்தி நகரைச் சேர்ந்த மட்டன் வியாபாரி மெஹகு பாஷா பெண் உள்பட நான்கு பேர் பயணம் செய்தனர் அவர்களை விசாரித்த போது தன்னுடைய மகள் திருமணத்திற்காக குடியாத்தம் பகுதியில் நகை வாங்க ரூபாய் 1 லட்சத்தி 3000 ரொக்கம் சுமார் 8 கிராம் நகை உரிய ஆவணம் என்று வைத்திருந்ததாக போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் குடியாத்தம் தொகுதி தேவலாபுரம் பகுதியில் உரிய ஆவணம் இன்றி குரு பிரசாத் என்பவர் ரூபாய் 76000 வைத்திருந்ததாக பறக்கும் படை போலீசார் பறிமுதல் செய்து குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி இடம் ஒப்படைத்தனர், மண்டல துணை வட்டாட்சியர் சுபி சந்தா் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment