வேலூர் பாராளுமன்றம் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது தேர்தல் விதி முறைப்படி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்ல தடை இந்நிலையில் பேரணாம்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபானந்த ராஜ் மற்றும் தலைமை காவலர் சுமதி தலைமையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கை ஈடுபட்டு வந்தனர்.
அப்போது டைல்ஸ் வியாபாரி ஆனந்தன் (வயது 28) என்பவர் காஞ்சிபுரம் காஞ்சிபுரத்திலிருந்து கார் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூர் செல்கிறார். அப்போது உரிய ஆவணம் இல்லாமல் தேர்தல் விதிமுறைக்கு மாறாக பத்திரபள்ளி சோதனை சாவடியில் அருகில் ரூபாய் 96700 பணம் எடுத்துச் செல்கிறார் வாகன தணிக்கை ஈடுபட்டு இருந்தவர்கள் பணத்தை பறிமுதல் செய்து குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி அவரிடம் ஒப்படைத்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment