வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமமுக கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அமமுக பொதுசெயலாளர் TTVதினகரன் ஆணைக்கினங்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் C. கோபால் தேர்தல் பிரிவு செயலாளர், மண்டல பொறுப்பாளர், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் NG. பார்த்திபன் அவர்கள் வழிகாட்டுதலின்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 7-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடி ஒடைபிள்ளையார் கோவில் அருகில் வேலூர் மாநகர் மாவட்ட கழகசெயலாளர் காட்பாடி AS. ராஜா எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அமமுக கட்சி கொடி எற்றி பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட நகர ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment