வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 20 March 2024

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் ஆலோசனை கூட்டம்.


குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வேலூர் பாராளுமன்ற தொகுதி செலவின மேற்பார்வையாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் செலவின மேற்பார்வையாளர் அமீர் கோயல் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வட்டாட்சியர் சித்ராதேவி தேர்தல் துணை வட்டாட்சியர் வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் தேர்தலுக்கான முதல் கட்ட செலவினங்களை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad