வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று இரவு வந்தடைந்தது.
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வடிவேல் ஆகியோர் முன்னிலையில், 293 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 349 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 349 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 378 வாக்களித்ததை உறுதி செய்யும் கருவிகள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டது.
இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஜே.கே.என். பழனி அதிமுக நகர மன்ற உறுப்பினர், கோவிந்தராஜ் திமுக, ரமேஷ் புதிய நீதி கட்சி, துரை செல்வம் கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது ஓட்டு மிஷின்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment