குடியாத்தத்தில் காமராஜர் பாலத்தில் உள்ள பெயர் பலகையை அகற்றியதை கண்டித்து சாலை மறியல். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 March 2024

குடியாத்தத்தில் காமராஜர் பாலத்தில் உள்ள பெயர் பலகையை அகற்றியதை கண்டித்து சாலை மறியல்.


குடியாத்தம் சட்டமன்றத் தேர்தலுக்காக நடந்த இடைத்தேர்தலில் கர்மவீரர் காமராஜர் அவர்கள் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனால் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது குடியாத்தம் நகரில் மையப் பகுதியாக இருந்த கவுண்டன்னியா  ஆற்றில் மேம்பாலம் கட்டி அதற்கு காமராஜர் மேம்பாலம் என்று பெயர் சூட்டினார்.

தற்போது 60 ஆண்டுக்கு மேல் ஆண்டுக்கு மேலாக காமராஜர் பாலம் என்று பொதுமக்கள் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது நீர்வளத்துறை சார்பில் தாழையாத்தம் பகுதியில் இருந்து சேம்பள்ளி கூட்டு ரோட் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற உள்ளது. இந்தப் பணிக்கு காமராஜர் அருகே ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது இதனால் பாலத்தின் அளவை குறைக்கப்பட உள்ளது.


இதற்கு  பாலத்தின் இரு புறம் உள்ள காமராஜர் பெயர் கொண்ட கல்வெட்டை அப்புறப்படுத்தினார்கள் இதனால் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரத் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் படித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காமராஜர் பாலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர காவல் ஆய்வாளர் பார்த்தசார தி மரியில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரிடம் இதை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அதன் பின் பாலம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர் மறியலில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad