வேலூர் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 24 March 2024

வேலூர் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர்  டாக்டர்  எஸ்.பசுபதி எம் டி அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி அவர்கள் தலைமை தாங்க வெற்றி வேட்பாளர் எஸ் பசுபதி அவர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் ஜே கே என் பழனி வரவேற்புரை ஆற்றினார்.

வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த வேலழகன், ஒன்றிய நகர செயலாளர்கள் டி சிவா எஸ்எல்எஸ் வனராஜ் எல் சீனிவாசன் டி பிரபாகரன் இன்ஜினியர் வெங்கடேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். வேட்பாளர் அறிமுக கூட்ட நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட செயலாளர் கே பி பிரதாப் குடியாத்தம் சட்டமன்ற பொறுப்பாளர் பொன் தனசீலன் எஸ் டி பி ஐ மண்டல தலைவர் பயாஸ் அகமது மாவட்ட பொது செயலாளர் முக்தார்  அஹமத் மனிதநேய கட்சி நகர செயலாளர் அனீஸ் புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் டீ கந்தன், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆர் கே மகாலிங்கம் எஸ் என் சுந்தரேசன் வி இ கருணா மெடிக்கல் சரவணன் ஜே பாஸ்கர் நகர மன்ற உறுப்பினர்கள் சிட்டிபாபு லாவண்யா குமரன், தண்டபாணி மற்றும் குடியாத்தம் நகர ஒன்றிய நிர்வாகிகள் பேரணாம்பட்டு நகர ஒன்றிய நிர்வாகிகள் உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


இறுதியில் மாவட்ட கழக பொருளாளர் காடை மூர்த்தி நன்றி கூறினார்.



குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad