வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரியும் விஷ்ணு பிரசாத் என்பவர் உரிய ஆவனம்யின்றி ரூ 4 62 486 இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார்.
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கம் படையினர் பணத்தை பறிமுதல் செய்து குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பிறகு பறிமுதல் செய்த 4,62,486 பணத்திற்கான உரிய ஆவணங்களை உதவி தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான சுபலட்சுமி இடம் வழங்கப்பட்டது ஆவணங்களை சரி பார்த்த பிறகு பணத்தை உரியவரிடம் திருப்பி வழங்கப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment