வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் ராஜி வயது 28 த/பெ பெருமாள் ௭ன்பவர் மின்வாரியதுறையில் தற்காலிக ஊழியராக கடந்த 4 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இன்று காலை 10-50 மரியாளவில் செதுக்கரை கிராம் பாபு மஹால் திருமண மண்டபம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மில் பியூஸ் போடுவதற்காக ஏறிய போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டதால் இடது கையில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து உள்ளார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment