வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் தொகுதி பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி 100% வாக்களிப்பை உறுதி செய்ய வகையில் மாநில காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. நெல்லூர் பேட்டை காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வழி சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் துணை ராணுவ படை அதிகாரிகள் மற்றும் ஏ டி எஸ் பி கோடீஸ்வரன் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் உள்ளிட்டோர் காவல்துறை துறையினர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment