தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ சி சண்முகம் அறிமுக கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 27 March 2024

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ சி சண்முகம் அறிமுக கூட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் 35 வது வார்டு ராஜகணபதி நகரில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் அறிமுக கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய இணை அமைச்சர் என் டி சண்முகம் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் புதிய நீதி கட்சி செயல் தலைவர் ஆர் ரவிக்குமார் பாஜக மாவட்ட தலைவர் லோகேஷ், குடியாத்த நகர தலைவர் சாய்  ஆனந்தன், பாமக மாவட்ட தலைவர் ஜி கே ரவி, புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் பிரமாஸ் செந்தில், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் பாரத் மகி, குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அருணாதயம், நகரத் தலைவர் தினகரன், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் எஸ் கோதண்டன்,  அ ம மு க மாவட்ட செயலாளர் வீ டி சதீஷ் மற்றும் பல கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும் புதிய நீதி கட்சி தலைவருமான ஏசி சண்முகம் பேசுகையில் 2014ஆம் ஆண்டு நடந்த எம்பி தேர்தலில் தாமரை சின்னத்தில் நின்ற போது சுமார் 25 ஆயிரம் ஓட்டும் 2019 ஆண்டில் நடந்த தேர்தலில் எட்டாயிரம் ஓட்டு அதிகமாக பெற்றிருந்தால் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன் நாங்கள் நடத்திய வேலை வாய்ப்பு முகாம் மூலம் சுமார் 14 ஆயிரத்து 500 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.


தற்போது நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்றவுடன் குடியாத்தம் பகுதியில் கைத்தறி பூங்கா ஏற்படுத்துவேன், சிறந்த லோக்சபா தொகுதியாக வேலூர் தொகுதியாக மாற்ற வேண்டும், கவுண்டன்ய மகாநதி ஆற்றில் 2000 க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளை அகற்றப்பட்டது விரைவில் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் 6- தொகுதிகளிலும் இலவச திருமண மண்டபங்கள் கட்டித் தருவேன். ஆயிரம் படுக்கை வசதிகள் கூடிய மருத்துவமனை அமைத்து வருவேன் என்று பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து பேசினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad