குடியாத்தம் ரயில்வே மேம்பாலத்தின் மீது கார் பஸ் நேருக்கு நேர் மோதல், வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில்வே மேம்பாலத்தின் மீது குடியாத்தத்தில் இருந்து வேலூரை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் சென்னை மடிப்பாக்கத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
எதிர்பாராத விதமாக பஸ் கார் மோதியதில் காரில் பயணம் செய்த பிரகாசம் (வயது 42) அவருடைய மனைவி சசிரேகா ( வயது 39) இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பஸ் மற்றும் கார் முன்பக்கம் அதிகமான சேதம் அடைந்தது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
.jpg)
No comments:
Post a Comment