வேலூர் மாவட்டம், வேலூர் K.V.குப்பம் கிராமத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி அறிமுக கூட்டம் நடைபெற்றது.
K.V.குப்பம் சட்டமன்ற தொகுதி D.M.கதிர் ஆனந்த் அறிமுகம் செய்த வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் K.சீத்தாராமன்அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் L.ரவிச்சந்திரன் நன்றி உரையுடன் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச் செயலாளர் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் D.M.கதிர் ஆனந்த அவர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். இதில் கூட்டணி கட்சி நகர ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் குபேந்திரன்

No comments:
Post a Comment