இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த செல்வம் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராமனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இராமன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் ஜேஎம் 1 கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந் தது நேற்று இறுதி விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் சிவப்பிரகாசம் ஆஜராகி வாதாடினார். நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார் .அதில் செல் வத்திற்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது .அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுப விக்க வேண்டும் என தெரி வித்திருந்தார். இதை அடுத்து செல்வத்தை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:
Post a Comment