வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் நகர் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது, இந்த கோயிலில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் காலை மற்றும் மாலை பூஜைகள் செய்து வழிபட்டு வந்த நிலையில் இன்று 7 மணியளவில் காலை பூஜை செய்வதற்காக அப்பகுதி பெண்கள் கோவிலுக்கு சென்ற போது கோவிலில் பூட்டை உடைத்து கோயிலில் இருந்த விநாயகர் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சடைந்தனர்.
மேலும் இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், சம்பவ இடத்திற்குச் சென்ற குடியாத்தம் நகர போலீசார் விநாயகர் சிலையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடியிருப்பு பகுதியில் விநாயகர் சிலை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment