இதே போல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது முதல் பரிசாக ரூபாய் 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூபாய் 5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூபாய் 3. லட்சமும் வழங்கப்பட உள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆராய்ச்சிகள், நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு காலநிலை மற்றும் தழுவுதல் மற்றும் தணிப்பு உமிழ்வு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறு சூழ்ச்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்போர் நலச் சங்கம், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களுக்கும் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் வேலூர் மாவட்டத்திற்கு மூன்று நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்ட அளவிலான விருது குழு (PLAC) மூலம் தேர்வு செய்யப்படுபவர் மேலே கூறப்பட்ட விருதுக்கு வேண்டிய படிவம் (TNPCB) இணையதளத்தில் உள்ளது https://tapcb.gov.in கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்பு கொள்ளவும். மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2023 க்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.04.2024. மற்றும் மஞ்சப்பை விருது 2023 - 2024 க்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 01.05.2024 ஆகும். ஆகவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment