குடியாத்தம் பகுதியில் மான் இறைச்சி வைத்திருந்தவர் கைது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 March 2024

குடியாத்தம் பகுதியில் மான் இறைச்சி வைத்திருந்தவர் கைது.


குடியாத்தம் அருகே மான் இறைச்சி வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். ரகசிய தகவலின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் கல்லப்பாடியை அடுத்த காந்திகணவாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(வயசு 40) வீட்டில் மான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் நாய்கள் கடித்து இறந்த மானின் இறைச்சியை கோவிந்தராஜ் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோவிந்தராஜை வனத்துறையினர் கைது செய்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad