வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் உலக மகளிர் தின விழா; சாதனை மகளிர் விருது வழங்கி பாராட்டி இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட கிளையும், வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரியின் விலங்கியல் துறையும் இணைந்து சர்வதேச மகளிர் தின விழா கல்லூரி மாநாட்டு அரங்கில் 08.03.2024 இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.பானுமதி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மற்றும் ஆக்ஸிலியம் கல்லூரி பேராசிரியை பே.அமுதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர்.
முன்னதாக விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் சசிகலா வரவேற்று பேசினார். வேதியியல் துறை பேராசிரியை முனைவர் எம்.நாகரத்தினம், வேலூர் பென்ட்லேன்ட் மருத்துவமனையின் முதுநிலை செவிலியர் கே.ஶ்ரீமதிகிருஷ்ணன், காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியை ஆர்.நிர்மலா, காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் எ.மேரிகுளோரியா, வேலூர் மேல்மொனவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை டி.சிலம்பரசி, கல்லூரி மாணவி சிவரஞ்சனி ஆகியோருக்கு சால்வை அணிவித்து 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முதலுதவி பயிற்சியாளர் கே.குணசேகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.குமரன், துணைத்தலைவர் கே.விசுவநாதன், வேலூர் கிளைச்செயலாளர் முத்து சிலுப்பன், காட்பாடி ரெட்கிராஸ் செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, அவை துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.என்.ராமச்சந்திரன், ஜி.வித்யா, வி.ரேகா, வினோதினி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் பேராசிரியை வி.ரேகா நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment