வேலூர் மாவட்டம் காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான 3ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது, வேலூர் மாவட்டம், காட்பாடியில் கே. பி.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தாஃப் நேசன் இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு மகளிருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் கார்த்திக் பிரசாந்த் ரெட்டி கலந்துகொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு அணியினருக்கு பதக்கத்தையும் மற்றும் கோப்பையையும் வழங்கினார். மேலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு அணிகளுக்கும் பத்தாயிரம் ரூபாய் வழங்கினார். இதில் சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரர்கள் மூன்று பேருக்கு கேடயம் வழங்கினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment