வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் வட்டம் கீழ் ஆலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன் சித்திரை திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நேற்று 27.04. 2024 சனிக்கிழமை அன்று புஷ்ப பல்லுக்கு நடைபெற்றது அதை தொடர்ந்து கெங்கை அம்மன் சிரசுக்கு 10:30 மணி அளவில் கண் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் அம்மனுக்கு ஊர் சார்பாக பூ மாலை கற்பூரம் தீப ஆராதனை செய்து பக்தர்கள் டாட்டா ஏசி மினி லாரியில் வாகனத்தில் முன்பாக முதுகில் அழகு குத்தி அம்மனுக்கு அருகே கவுந்தபடியாக மாலை கொண்டு வந்து அணிவித்து நேர்த்திக்கடனை செய்தார்கள்
மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சீர்வரிசை தட்டுகள் வைத்து அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடனன மனநிறையோடு நிறைவு செய்தார்கள், விழாவுக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் தர்மகர்த்தா பக்தவச்சலம் முன்னிலையில் திருவிழா கமிட்டியா்கள் சார்பாக நடைபெற்றது இந்த கங்கை அம்மன் திருவிழா மிக வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று இரவு அம்மன் திருவீதி உலா மற்றும் வான வேடிக்கைகள் நடைபெற உள்ளது.
- கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் குபேந்திரன்

No comments:
Post a Comment