குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 4 பெண்கள் பலி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 1 April 2024

குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 4 பெண்கள் பலி


வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் வசிக்கும் யுவராஜ் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா இவர்களுக்கு  2 மகள்கள் உள்ளனர். காவியா (வயது 18) குடியாத்தம் அருகே தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

தங்கை  பீரித்தி (வயது  16 )இவர் வீட்டின் அருகே சரோஜா (வயது 50) இவரது கணவர் சில ஆண்டுக்கு முன் காலமாகிவிட்டார். இவருக்கு  4 மகள்கள் அதில் மூன்று மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடைசி மகள் லலிதா (வயது 21) எம் எஸ் சி முடித்துவிட்டு வீட்டில் தாயுடன் இருந்து உள்ளார். இந்நிலையில் லாவண்யா இவரது மகள்கள் காவியா பிரீத்தி இவரது தம்பி மகன் சிறுவன் (வயது  2) சரோஜா இவரது மகள் லலிதா ஆகியோர் நேற்று மாலை வேப்பூர் அருகே உள்ள முனீஸ்வரன் கோவில் கோவிலுக்கு குலதெய்வம் கும்பிடுவதற்காக சென்று உள்ளார்கள் பிறகு அருகில் உள்ள ஏரியை பார்க்கச் சென்றுள்ளார்கள் பிறகு காவியா பிரீத்தி சரோஜா லலிதா ஆகிய நால்வரும் ஏரியில் குளிக்க இறங்கி உள்ளார்கள்.


லாவண்யா தனது தம்பி மகனை வைத்துக்கொண்டு கரையில் அமர்ந்து உள்ளார்கள் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த காவியா பிரீத்தி ஆகியோர் ஆழமான பகுதியைச் சென்று  சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளார். இவர்கள் காப்பாற்ற சொல்லி அலறியதும் அருகில் குளித்துக் கொண்டிருந்த சரோஜா லலிதா ஆகியோர் காப்பாற்ற முயன்றனர் அவர்களும் சேற்றில் சிக்கிக் கொண்டனர் .இதில் நான்கு பேரும் தண்ணீர் மூழ்கினா்கள்.


இதை கவனித்த லாவண்யா கூச்சல் விடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஏரியில் மூழ்கிய நான்கு பேர் சடலங்களையும் தேடினார்கள் பிறகு சடலங்கலை மீட்டனர்.


தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad