வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் தாலுகா, பில்லாந்திப்பட்டு மைதானத்தில், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் 2024ம் வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
புதிய நீதி கட்சி தலைவரும், பாஜக கூட்டணி தாமரை சின்னத்தின் வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் தோழமைக் கட்சிகளுடன் பில்லாந்திப்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து கூட்ட மைதானம் வரை மேளதாளத்துடன் பொதுமக்கள் மத்தியில் அறிமுகமானார்.
இந்த அறிமுகக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மாவட்ட அளவிலான, மாநில அளவிலான நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் புதிய நீதி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு அறிமுக கூட்டத்தை சிறப்பித்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment