காட்பாடி 5வது வட்ட அமமுக சார்பில் பாமக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 2 April 2024

காட்பாடி 5வது வட்ட அமமுக சார்பில் பாமக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு.


அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்பாடி 5வது வட்ட அமமுக சார்பில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலுவுக்கு வாக்கு சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் பாலுவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி அமமுக சார்பில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில் காட்பாடி 5வது வட்டத்துக்கு உட்பட்ட கிளித்தான் பட்டறை, ஏரி முனை, பெரிய பட்டறை, குடியாத்தம் ரோடு ஆகிய பகுதிகள் உட்பட காட்பாடி வடக்கு பகுதி முழுவதும் வாக்கு சேகரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.
 

இந்த வாக்கு சேகரிக்கும் பணியில் 5வது வட்ட அமமுக வட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை வகித்தார். அவருடன் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் கே. எம். சக்திவேல் மற்றும் மோகன், பால்காரர் கிருஷ்ணமூர்த்தி, கணேசன், கே. எஸ். முரளி, வெங்கடேசன் மற்றும் பாமக பொறுப்பாளர்கள், பாஜக பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்காளர்களை சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு அமோக வெற்றியை தாருங்கள் என கேட்டுக்கொண்டனர். 


வாக்காளர்களும் பாமகவினரின் அணுகுமுறையை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு தாங்களும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad