பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ்குமார். இ.ஆய, அவர்கள் முன்னிலையில் இன்று (02.04.2024) மாவட்ட ஆட்சியர் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வராஜ் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வி சுபலட்சுமி. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இராமசந்திரன், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment